Wednesday, March 7, 2012

'கோகுலம் வாசகர் வட்டம்' ; ஓர் அறிமுகம்


'கோகுலம் வாசகர் வட்டம்' என்பது எங்களது ஒரு சிறிய முயற்சி.

வாசிப்புப் பழக்கத்தினை இளையவர்கள் மத்தியில் மீண்டும் முளைக்கச் செய்வதற்கான சிறு விதை.

இன்றைய 'நவீன' உலகம் என்று சொல்லப்படுகிற நவநாகரிக உலகில் வாசிப்பு என்பது ஏதோ ஒதுக்கப்படவேண்டிய - பிற்போக்குத்தனமான செயற்பாடு என்ற நிலை இளையவர்கள் மத்தியில் விஷமாக விதைக்கப்பட்டுவருகிறது.

இலத்திரனியல் ஊடகங்களின் வளர்ச்சி, வாசிப்புப் பழக்கத்தை இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து முற்றாக நீக்கிவிடும் ஒரு 'நல்ல'! காரியத்தை தன்னையறியாமலேயே செய்துவருகிறது.

எனவே, எம்மால் இயன்ற அளவு, வாசிப்புப் பழக்கத்தை எமது இளைய தலைமுறை மத்தியில் நிலைக்கச் செய்வதற்கு முயற்சி செய்வோம் என்ற எண்ணக்கருவில் இந்த 'கோகுலம் வாசகர் வட்டம்' என்னும் அமைப்பினை உருவாக்கியிருக்கிறோம்.

வாசிப்புப் பழக்கம் உள்ள ஒவ்வொருவரும் இதன் அங்கத்தவர்களே! எனவே, இந்த வலைப்பூவின் முதல் பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் எங்களது 'கோகுலம் வாசகர் வட்டத்தின்' அங்கத்தவராகியிருக்கிறீர்கள்.

உங்கள் ஒவ்வொருவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

வாருங்கள்; எங்கள் மத்தியிலிருந்து வெகு வேகமாக விலகிச் சென்றுகொண்டிருக்கும் வாசிப்புப் பழக்கத்தை இழுத்துப்பிடித்து நிலைபெறச் செய்வோம்!

5 comments:

  1. நல்ல முயற்சி. உங்கள் வாசிப்பு வட்டம் புகழ் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நன்றி Rafiq Raja அவர்களே! உங்கள் வருகைக்கும், உங்கள் பின்னூட்டத்துக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  3. உங்களது முயற்சி பலனளிக்க எமது மனமார்ந்த வாழ்த்துகள். முத்து காமிக்ஸ் லார்கோவிற்கு நன்றி. - நிசா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதரவுக்கும், பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நிசா.

      விலை நிர்ணயம் உங்களுக்குத் திருப்திதானே? வெளியே இனி 'பிரபல' புத்தகசாலைகள் இந்தப் புத்தகங்களைக் கொண்டுவந்தாலும் அதிக விலையில்தான் விற்பார்கள் என்று நினைக்கிறோம்.

      இந்த முயற்சியில் எம்மோடு கரங்கோர்த்திருக்கும் பிரதிபலன் எதிர்பாராத அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் உங்கள் வாழ்த்துக்கள் போய்ச்சேரட்டும்.

      Delete
  4. U can get the books now!
    இதோ வந்துவிட்டன நீங்கள் எதிர்பார்த்திருந்த புத்தம்புதிய காமிக்ஸ் புத்தகங்கள்!!!

    கொழும்பு - வெள்ளவத்தையில் - பழைய சந்தைக்கு எதிராக இருக்கும் பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள (DSI க்கு அருகில்) பத்திரிகை விற்கும் கடையில்,

    அல்லது ப்ரெட்ரிக்கா வீதி காலிவீதியை சந்திக்கும் இடத்துக்கு மறுபக்கமிருக்கும் 'Dot Music' கில்,

    அல்லது பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள பழங்கள், பூசைப்பொருட்கள், புத்தகங்கள் விற்கும் (குமரன் - கணேஷ் - அண்ணை) கடையிலும் கிடைக்கும்.

    ------------------------

    புதிய வெளியீடுகளின் விலை விபரம்:

    சாத்தானின் தூதன் டாக்டர் 7 - ரூபா 65, முத்து காமிக்ஸ் Surprise - ஸ்பெஷல்! - என் பெயர் லார்கோ - ரூபா 435.
    #Largo winch

    ReplyDelete